மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும்போது உஷாரா இருங்க
கணவனும் மனைவியும் லிப்ட்டில் 10 வது மாடியிலிருந்து கீழே வந்து கொண்டிருக்கிறார்கள். 5-வது மாடியில் அழகான இளம்பெண் ஒருத்தி லிப்ட்டில் ஏறி அந்த கணவன் பக்கத்தில் நிற்க, அவன் அவளின் அழகில் மயங்கி ஜொள்ளு விடுகிறான்.
சிறிது நேரத்துக்குப்பின் அவள் இவனது கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு "இனி இப்படி செய்தால் செருப்பு பிஞ்சிரும்" னு சொல்லிட்டு அவனிடமிருந்து விலகி நிற்கிறாள். இவனுக்கோ தன் மனைவி முன்னிலையில் அடிவாங்கிய அவமானம்.
லிப்ட்டில் இருந்து இறங்கி வெகுநேரமாகியும் மனைவியிடம் பேச வெட்கப்பட்டு வாயடைத்து தலை குனிந்து வீட்டிற்கு நடக்கிறார்கள்.
மனைவி : ஏங்க அதையே நினைச்சிகிட்டு. விடுங்க. ஏதாவது பேசிட்டு வாங்க.
கணவன் : இல்லடி, நான் லிப்ட் ல...
மனைவி : அட, அத தான் விடுங்கடன்னு சொன்னேன். நீங்க ஜொள்ளு விடுறத பொறுக்காம நான்தான் அவ இடுப்பைக் கிள்ளினேன்.
கணவன் : (மீண்டும் வாயடைத்தான்)
No comments:
Post a Comment